உயிரோடு இருக்கும் தமிழீழ தேசிய தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் செலுத்தி சிறிலங்கா அரசின் பொய் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கை டென்மார்க்கில் எடுக்கப்பட்டுவருவதாக சிறிலங்கா அரச ஆதரவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ தேசியதலைவரை தாம் கொன்றுவிட்டதாக கூறியதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற கருத்தை சிங்கள மக்களிடம் விதைத்து சிறிலங்காவின் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுகொள்ள சிங்கள அரசியல் தலைமைகளினால் செய்யப்பட்ட சதியே தேசியத்தலைவருக்கான விளக்கேற்றல் என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.
தமிழீழ விடுதலைப்பேராட்டத்திற்கு எதிராக டென்மார்க் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு சிறிலங்கா அரச ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்பாட்டாளர்களின் தமிழீழ விடுதலைப்போராட்ட எதிர்பு நடவடிக்கைகளை அறிந்துள்ள டென்மார்க் வாழ் தமிழீழமக்கள் நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பதை ஏற்பாட்டாளர்களில் ஒருவரே சிறிலங்கா அரச ஆதரவு ஊடகத்தில் கூறியிருந்தார்.
ஆனால் ஜரோப்பிய நாடுகள் சிலவற்றில் இருந்து நிகழ்வு ஏற்பாடளர்களின் தமிழீழவிடுதலைப் போராட்ட எதிர்பை அறியாத சில தமிழ்மக்களை டென்மார்க் அழைத்துவர சில சிறிலங்கா அரச ஆதரவாளர்கள் முயற்சிப்பதாக அறியப்படுகின்றது.
தமிழீழ தேசியதலைவரின் மனைவி மதிவதனியின் சகோதரர்கள் டென்மார்கில் வாழ்வதும் அவர்களில் சகோதரி அருணா தனது தங்கையும் தேசிய தலைவரும் புதல்வி துவாரகாவும் உயிருடன் இருப்பதுடன் அவர்களை தான் நேரில் சந்தித்ததாகவும் ஏற்கவே ஊடகங்களில் nதிரிவித்துள்ளார். இந்தியா மற்றும் கனடாவில் வசிக்கும் தமிழீழதேசிய தலைவரின் சகோதரிகளும் இந்த நிகழ்விற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தெரியவில்லை.
உயிரோடு இருப்பவர்களை இறந்தாக அறிவித்து வணக்கநிகழ்வு நடாத்துவதும் அந்த நிகழ்வில் கலந்துகொளவதும் சட்டவிரோத நடவடிக்கையே. இது தொடர்பாக டென்மார்க் காவல்துறைக்கு முறைப்பாடுகள் தமிழ்மக்களால் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை முறைப்பாட்டை ஏற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாம் அறிகின்றோம். ஆனால் டென்மார்க் தென்கிழக்கு பிராந்திய காவல்துறையினர் இது தொடர்பான தகவல்களை எமக்கு தர மறுத்துவிட்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவரும் சில சிறிலங்கா அரச ஆதரவாளர்களால் டென்மார்க்கில் வாழும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீது தாக்கதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் சில செயற்பாட்டாளர்களுக்கு வட்சப் ஊடாக ஏற்கனவே மிரட்டலகள் விடப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இவ்விடயம் டென்மார்க் காவல்துறையின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஏற்பாடளர்களின் விளம்பரத்தில் முதலில் கூறப்பட்டிருந்த FOF Vejle என்ற அமைப்பின் தலைவர் தமக்கும் இந்த நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட மண்டபத்தினரும் நிகழ்வை நடாத்துவதர்க்கான அனுமதியை இரத்துச்செய்துள்ளனர்.
டென்மார்க் வாழ் தமிழீழ மக்களின் எதிர்ப்பலையின் காரணமாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் புதிய மண்டப விபரத்தை நிகழ்வு நடைபெறும் நாளில் அறிவிப்பதாக இப்பொழுது தெரிவித்துள்ளனர்.
நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைல நகர டெனிஸ் தமிழ் நட்புறவுச்சங்கம் உட்பட எந்தவொரு தமிழ் அமைப்புக்களும் தேசியதலைவரின் இருப்பை மறுதலிக்கும் இந்த நிகழ்வை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.