சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர்கள் செயற்பட்டதையும் செயற்படுவதையும் காலம் காலமாக பார்த்து வருகின்றோம். இது தமிழர்களின் சுதந்திர விடுதலைப்போராத்திற்கு பெரும் ஆபத்தாக இருப்பதை தமிழர்கள் உணரவேண்டும்.
தற்பொழுது சிங்களத்தின் சதிவலையில் வீழ்ந்த தேசிய தலைவரின் சகோதரரின் குடும்பம் எதிர்வரும் மே 18ம் நாள் தேசியதலைவரின் இருப்பை மறுதலித்து அவருக்கு விளக்கேற்ற போவதாக அறிவித்துள்ளார்கள். இது உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதுடன் உலகத்தமிழர்களின் மன ஊறுதியை உடைத்தெறியும் செயலாகும்.
தேசியதலைவரின் இருப்பை மறுதலித்து சிங்களத்திற்கு துணை போகும் இச்செயலிற்கு தமிழர் தம் எதிர்ப்பை காட்டிவரும் இவ்வேளையில் காலத்தின் தேவைகருத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளையினர் வெளியிட்ட அறிக்கையை டென்மார்க் தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்களே வரவேற்கின்றனர்.
சிங்களத்தின் சதிவலையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு முரண்பாடுகளுடன் செயற்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர்களை ஓன்றிணைத்துள்ளதாகவே பார்ப்பதுடன் பொது எதிரியின் தமிழின அழிப்பு செயற்ப்பாடுகளுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டியதையும் வலியுறுத்தியுள்ளதாகவே அவதானிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளையினரின் இந்த வரலாற்று செயல்பாட்டை முன்மாதிரியாக ஏற்று ஏனய நாட்டு கிளையினரும் விரைந்து செயல்பட்டு சிங்களத்தின் சதியை உடைக்க செயல்படவேண்டும் என தமிழ் மக்கள் வலியுறுத்துவதாகவே ஏனய நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.