தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மறுதலித்து சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டவற்கு டென்மார்க் தமிழர் பேரவை உணவு வழங்கியதாக முகனூலில் வந்த செய்திக்கு டென்மார்க் தமிழர் பேரவை தமது கண்டனத்தை நேற்று வெளியிட்டிருந்தது.
தமது கண்டனத்தை முகனூலில் வெளியிட்ட கார்த்திக் மனோகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தனர்.
டென்மார்க் தமிழர் பேரவை தமிழீழ தேசியத்தலைவரினதோ தேசப்புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரனினதோ இருப்பை மறுதலிக்கும் எந்த நிகழ்விற்கும் அதரவளிக்கவில்லை எனவும் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வை கண்டித்து தமது அரசியல் குழு கடந்த மே மாதம் 15 ம் நாள் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன் தமது வழக்கறிஞர் ஊடாக தமது கண்டனத்ததையும் தேசியதலைமையின் இருப்பையும் நிகழ்வு நடைபெற்ற மண்டப உரிமையாளருக்கு தெரிவித்திருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலமையில் தமது அமைப்பின் பெயரையும் தமது தமிழ் மக்களுக்கான அரசியல் செயல்பாடுகளையும் களங்கப்படுத்துமுகமா முகனூலில் தாம் நிகழ்வில் கலந்துகொண்டதாக பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளர்.
கார்த்திக் மனோகரனின் முகனூல் பதிவில் இருந்து டென்மார்க் தமிழர் பேரவையின் பெயர் இப்பொழுது நீக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உளளது.
டென்மார்க் தமிழர் பேரவையின் கண்டன கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.