சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தேசத்தின் புதல்வி செல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இந்த வாரம் முதல் செயல்படும் என்ற செய்தியை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது முகநூல்களில் மகிழ்சியுடன் பகிர்ந்துவருகின்றனர்.
இதுவரை காலமும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராக செயற்பட்ட மதிப்புக்குரிய ரகு அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தற்போதைய சூழலின் எதார்த்த நிலையையும் புரிந்து கொண்டு அன்புடனும் பண்புடனும் அறத்துடனும் பொதுமக்களையும் விடுதலை விரும்பிகளையும் செயல் ஆற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளராக தமிழீழ தேசிய தலைவர் அவர்களினால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள திரு ரகுபதி அவர்களை வாழ்த்துவதுடன் தேசபணியில் அவருடன் இணைந்து செயலாற்ற சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர்.
தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரனின் வழிகாட்டலில் உலகதமிழர் ஒருங்கிணைப்பு குழு செயலாற்றி வரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சுவிஸ் கிளையும் இப்பொழுது தேசத்தின் புதல்வியின் வழிகாட்டலில் இயங்க ஆரம்பித்திருப்பதும் அதன் பொறுப்பாளரை தேசிய தலைவரே நேரடியாக நியமித்திருப்பதும் மற்றய புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழீழ தேசிய செயற்பாட்டளர்களும் மீண்டும் தேசியதலைமையால் ஒருகிணைக்கப்படுவார்கள் எனவே மக்கள் கருதுகின்றனர்.