தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி கிளைகளை கையகப்படுத்தவோ அன்றி தேசிய கட்டமைப்புக்களையும் அதன் சொத்துக்களையும் ஆக்கிரமிக்கவோ எவராவது முற்ப்பட்டால் அது சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் Nதுசவிரோத நடவடிக்கையாக தலைமைபீடத்தால் கருதப்பட்டு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைப்பீட நிரவாக பொறுப்பாளர் சி.சுவந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
03 செப்ரம்பர் 2024 அன்று தமிழீழவிடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து கிளை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமது தலைமைபீடத்தின் 15 ஆண்டுகால மௌனத்தை அமைப்பின் பலவீனத்தின் வெளிப்பாடாக யாராவது கற்பிதம் செய்தால், அது ஒரு தவறான புரிதலாகவே அமையும் எனவும் தெரித்துள்ளனர்.
குறிப்பாக தமிழீழ தேசித்தலைவரை சந்தித்து வந்து சுவிற்சர்லாந்து கிளையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள திரு.ரகுபதி அவர்களுக்கு எதிராக விசமத்தனமான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசால் இயக்கப்படும் தேசவிரோதிகளிற்கு எதிரான அறிக்கையில் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி திட்டங்களுக்கு துணை போவோரை இனங்கண்டு அவர்களை புறக்கணித்து தேசவிடுதலைக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைத்து தமிழ் மக்களையும் உரிமையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.>>>>>>>