டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16-02-2025) அன்று நடைபெற்ற டென்மார்க் வாழ் தமிழீழ மக்களுடான கலந்துரையாடலில் இணையவளியாக கலந்து கொண்டிருந்த தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன், தமிழீழ மக்களின் விடியலுக்கான அரசியல் போராட்டத்தை தனது தந்தையும் தமிழீழ தேசியதலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் மாமா என்று அவரால் அழைக்கப்பட்ட தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்களினதும் ஆலோசனையுடன் மேற்கொள்ளுவதாக குறிப்பிட்டிருந்தார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த பொதுமகன் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கு போதே மேற்கொண்ட விடயத்தை கூறினார்.
கலந்துரையாடலை குழப்புமுகமாக சிலரால் குதர்க்கமான கேள்விகள் கேட்கப்பட்ட போதும் தேசத்தின் புதல்வி நிதானமாக சிறந்தமுறையில் சகல கேள்விகளுக்கும் பதில் அளித்தமை தலைமைபீடத்தின் வழிநடத்தலை வெளிக்காட்டியிருந்தது.
டென்மார்கில் கலந்துரையாடலை தேசத்தின் புதல்வியின் தாய்மாமனும் நீண்டாகால தமிழீழ சுதந்திர செயல்பாட்டாளருமாகிய திரு. ஏரம்பு சிறிதரன் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் சிட்டு அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்,
தேசத்தின் புதல்வியின் தாய்மாமனின் உருக்கமான சிறிய உரையை தொடர்ந்து அண்மையில் தலைமைபீடத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு தேசிய தலைவரையும் போராளிகளையும் சந்தித்து திரும்பியிருந்த தமிழீழவிடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளை பொறுப்பாளர் திரு. ரகுபதி தனது தலைமைப்பீடத்தினுடான சந்திப்பு தொடர்பாக உரையாற்றினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் தமிழீழ சுதந்திர செயல்பாட்டாளர்களினால் டென்மார்கில் `இயக்கம்´ என கூறி செயல்படுபவர்கள் மீதான பல விமர்சனங்களை தலைமைபீடத்திற்கு தேசத்தின் புதல்வியூடாக தெரிவித்திருந்தனர்.
தொடர்சியாக சகல நாடுகளிலும் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்புக்களின் தொடர்சியாக மீண்டும் டென்மார்க்கில் நடைபெற இருக்கும் கலந்துரையாடலுக்கு `இயக்கம்´ என கூறி செயல்படுபவர்களையும் அழைத்துவருமாறு மக்களிடம் தேசத்தின் புதல்வி வேண்டுகோள்விடுத்திருந்தார்.
அனைத்துலகம் அல்லது இயக்கம் என செயல்படுபவர்களுடன் தான் ஏற்கனவே பேச்சுவார்தையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தேசிய தலைமையினதோ தனதோ வெளிப்பாட்டை விரும்பவில்லை என தேசத்தின் புதல்வி தெரிவித்தார். அவர்கள் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் தன்னால் மேலதிக விபரங்களை தெரிவிக்கமுடியும் எனவும் கூறினார்