தமிழீழ மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தமிழீழ மக்களுக்கும், தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் ஐக்கிய இராச்சியத்திலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழதேசியத் தலைமையையும் புலனாய்வுப் பொறுப்பாளரையும் மிகவும் அண்மையில் சந்தித்துவிட்டு வந்த முக்கியமானவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு அபிங்டன் (Abingdon) நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் தலைமைப்பீடத்தின் முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் நேரலைமூலம் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கலந்துரையாடல் ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்.
கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் தமிழீழ சுதந்திர செயல்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் நடைபெறவிருக்கும் மண்டப விபரம் 15-03-2025 சனிக்கிழமை அன்று தமிழீழ சுதந்திர செயல்பாட்டளர்களினால் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும் என கலந்துரையாடல் ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு : +44 7890 180829