2009 மே மாதம் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் பொதுவெளியில் வெளியாகவில்லை.மாறாக புலம்பெயர் கட்டமைப்புகளூடாகப் போர்முடிந்தபின்னர் முன்னால் போராளிகள், புலனாய்வாளர்கள் என்று சிலர் செயற்பாடாளர்களுடனும் ஆதரவாளர்கள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு சென்றனர்.
தெய்வீகன் என்ற போராளியைப் பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. தேசியத்தலைமையினால் உருவாக்கப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட போராளி தெய்வீகன் தலைமையில் ஓர் அணியை களத்தில் மிக இரகசியமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பாதுகாப்பாக தலைமை இறக்கியிருந்ததை புலத்திலுள்ள அமைப்புகளிலுள்ள செயற்பாட்டாளர்களில் மிகச்சிலரே அறிந்திருந்தனர்.
அடுத்தகட்ட நகர்விற்காக தெயவீகன் புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை ஆரம்பித்த போது இப்போது தேசத்தின் புதல்வியை உறுதிப்படுத்தக் கோரி முனவக்கப்படும் கோரிக்கைகளை விட மோசமாக அந்தப் போராளியிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கோரிக்கைகளுடன் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்ட வசைபாடுதல்களினால் தெயவீகன் உளவியல் ரீதியாக கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வண்ணம் இந்த புலம்பெயர் அமைப்புக்களில் முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் நடந்து கொண்டனர்.
இறுதியாக உறுதிப்படுத்துவற்காக நீண்ட நாட்களாக முகம் காட்டாத போராளி தன்முகத்தை காட்டினார். அவர் செயற்பாட்டில் இறங்க முதலே கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
வன்னியில் 69 குடும்பங்கள் வரை கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, அதில் டென்மார்க் செயற்பாட்டாளர் ஒருவரின் தாயாரும் அடங்கும். அவர் பின்னர் விடுதலையாகி சிறிது காலத்தின் பின்னர் நோய் வாய்ப்பட்டு மரணமடைந்ததையும் அறியமுடிகிறது.
இதே போன்றுதான் தலலவரின் மகள் துவாரகாவை உறதிப்படுத்த அருணாப் பெரியம்மா அனுப்பப்பட்டார், பின்னர் சிறிமாமாவை அணுகினார்கள். தலைமையச் சந்தித்துவிட்டு வந்த ரகுபதியவர்களை நம்ப மறுத்து அவரைத் தனிமைப்படுத்தி அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசி அனைத்துலக தொடர்பகம் தரும் நபர்களை அழைத்துச் சென்றால் தாம் நம்புவதாகக் கூறினார்கள், 2024 நவம்பர் மாத இறுதியில் தலைமையைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிகின்றது.
அனைத்துலக தொடர்பகத்தால் வழங்கிய குழுவில் போராளி தெய்வீகனைக் காட்டிக் கொடுத்தாகச் சந்தேகப்படும் நபர்களும் அடங்கியதாக அறிய முடிகிறது. பயணம் முற்றுப் பெறவில்லை. டென்மார்க் கிளையினரும் அவர்கள் வந்து சொன்னால் மட்டுமே நம்புவார்களாம்.
மணிக்கு மணிமாறும் உலக அரசியலில் விரைவாகக் சில நகர்வுகளை மேற்கொள்ளத் தலைமைப்பீடம் விரும்புகிறது அதற்கேற்ப சில செயற்பாடுகளைச் சில பொதுமக்கள் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதே யதார்த்தம். „கிளை"ச்செயற்பாட்ளர்கள்
இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற இவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.
2009 இலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும், „கிளை‟யில் ஏற்பட்ட மாற்றங்கள். போராளி தெய்வீகன் தொடர்பான விபரங்கள், அவரின் வீரமரணம் தொடர்பாக அப்போது பொறுப்பிலிருந்தவர்கள் மக்கள் முன் தெரியப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பிலுள்ளார்கள்.