கடந்த சில மாதங்களாக புலிகளின் தலைமைப்பீடத்தின் அறிவுறுத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழ் மக்களுடன் இணையவழி சந்திப்புக்களை நடத்தி தங்கள் இருப்பு தொடர்பில் அதனை தெளிவூட்டி வரும் நிலையில் புலம்பெயர் தேசங்களில் தாங்களை தாங்களே புலிகள் என கூறித்திரியும் போலிப் புலிகள் மக்களைக் குழப்பி வருகின்றனர்.
வீதிகளில் நின்று மக்களை மறித்து இணையவழிச் சந்திப்புக்குச் செல்லவேண்டாம் என்று பரப்புரை செய்துவருகின்றனர் இவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்ததில் இயக்கத்தில் சிறிது காலம் இருந்து ஓடியவர்களும், இயக்கத்தால் அடைத்து தண்டனை பெற்றவர்களும், வெளிநாட்டு வதிவிட உரிமைக்காக (விசா)தங்களைத் தாங்களே இயக்கம் என்று பதிவு செய்தவர்கள் ஆகும்.
இவர்கள் தான் அண்மை காலமாக இயக்கம் இல்லை தேசிய தலைவர்,பொட்டு அம்மான்,துவாரகா இல்லை இவர்கள் இருந்திருந்தால் தங்கள் உறவினர்களுடன் தொடர்பைப் பேணி இருப்பார்கள் என்று புலம்பி வருபவர்கள்.
ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் இயக்கம் எந்தவொரு இயக்கச் செயற்பாடுகளையும் தங்கள் குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை, ஒரு கரும்புலி கூட தான் வெடிக்கத் தயாராகும் பட்சத்தில் விடுமுறையில் வீடு சென்றால் கூட அவர்கள் தங்கள் குடுப்பத்தினருக்கு தாங்கள் என்ன செய்ய போறம் என்று சொல்வது இல்லை முகபாவனையில்க்கூட மாற்றம் தெரிவதில்லை அதுதான் இயக்கத்தின் நடமுறையாகும்,இரகசியமும்.
இது உண்மையான புலிகளுக்கு விளங்கும் இயக்கமும் தலைமைப் பீடமும் இல்லை என்றால் தற்போது மக்கள் சந்திப்புக்களை நடத்துவது யார்? போலிப் புலிகள் சொல்வது போல அவர்கள் இல்லை என்றால் மக்கள் அந்த சந்திப்புக்கு சென்று தெரிந்து கொள்ளட்டும் ஏன் இவர்கள் இடைமறிக்கவேண்டும்.
தேசிய தலைவர் பொட்டு அம்மான் துவாரகா மறறும் பலர் இருப்பது உறுதி அவர்கள் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தேசிய தலைவர் தான் எடுத்துக்கொண்ட லட்சியத்தை நிறைவேற்றுவது அவரின் தார்மீக கடமை அதற்காக அவர் உயிரோடு தன் போராளிகளோடு சில தயார் படுத்தல்களை செய்து வருகின்றார். எனவே எமது அன்பான மக்களே தயாராகுங்கள் அணிதிரளுவோம் எமது தலைவன் வழியில் அடைவோம் சுதந்திர தமிழீழம்.
நன்றி: கிளிநொச்சி விசேட செய்திகள்