தலைமையின் இருப்பு, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழீழ தாயகத்தில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பான சந்திப்புக்களை நிகழ்த்தும் நிமித்தம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைபீட பிரதிநிதிகள் நேரடியாக ஐரோப்பா வருகை தர இருப்பதாக அறியமுடிகின்றது.
தேசிய தலைவரின் கட்டளைக்கிணங்க ஐரோப்பா வரும் சிவந்திரன் (நிர்வாகம்) இசைவாணன் (நிதித்துறை) குட்டி (அரசியல் துறை) கலையரசன் (அரசியல் துறை) ஆகிய பிரதிநிதிகள் முதற்கட்டமாக டென்மார்க் சுவிற்சர்லாந்து நாடுகளில் ஏற்பாடு செய்யப்படவுள்ள மாபெரும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிகின்றது.
இவ்வறிவித்தல் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களையும் இன்பகடலில் மூழ்கவைத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.