தமிழீழ தேசியத்தலைவரின் நேரடியான அறிவுறுத்தல்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் தலைமைப்பீடத்தின் முக்கிய பிரதிநிதிகள் முக்கிய சந்திப்புகளை தமிழ் மக்களுடன் நடாத்த இருப்பதாக உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழு சுவிற்சிலாந்து இன்று ( 12-04-2025)வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் பொறுப்பாளர் திரு.ஜெயபாலன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் தொடர்பான உண்மை நிலவரங்களை தெளிவுபடுத்துவதுடன் தேசியத்தலைவர் அவர்கள் தனது இருப்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் மக்களுக்கு காண்பிக்குமாறும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலைமைப்பீடத்தின் முக்கிய பிரதிநிதிகள் முதற்கட்டமாக சுவிற்சுலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்யவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய தலைவரின் திருமுகங்களை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஈழத்தமிழ் உறவுகளை தமது தொலைபேசி இலக்கத்துடன் ( +41 79 967 84 47 )தொடர்புகொள்ளுமாறும் உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழுவினர் வேண்டியுள்ளனர்.

